பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைப்பதற்கு தமது அணி தயாரில்லை என்று விமல் வீரவன்ச தலைமையிலான ‘உத்தர லங்கா சபாகய’ எனும் கூட்டணி அறிவித்துள்ளது.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மொட்டு கட்சி என்பவற்றுடனும் கூட்டணி பயணம் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மாற்று தரப்புகளுடன் இணைந்து பரந்தப்பட்ட அரசியல் கூட்டணி அமைக்கப்படும் எனவும், அவை தொடர்பான தகவல்கள், பேச்சுகள் வெற்றியளித்த பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ‘உத்தர லங்கா சபாகய’வின் பிரதித் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. குறிப்பிட்டார்.
