ஐக்கிய மக்கள் சக்தியை இரண்டாக பிளவுபடுத்துவதே ரணில் விக்கிரமசிங்கவின் இலக்காக இருக்கின்றது – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே ஹிருணிக்கா இவ்வாறு குறிப்பிட்டார்
சிறிகொத்தமீது இடம்பெற்ற கல்வீச்சு தாக்குதல், ஐக்கிய தேசியக் கட்சி பிளவு பட்டு புதிய கட்சி உதயமானது, வீடு எரிக்கப்பட்டமை ஆகிய மூன்று சம்பவங்கள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க கடும் சீற்றத்தில் உள்ளார். பழி தீர்க்க வேண்டும் என எண்ணுகிறார்.
ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்திய பின்னரே அவர் நிம்மதி அடைவார்.
அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் திட்டமிட்ட அடிப்படையில் வேட்டையாடப்படுகின்றனர். அவர்களை பாசிசவாதிகளாகக் காண்பிப்பதற்கே முயற்சி எடுக்கப்படுகின்றது. ” எனவும் ஹிருணிக்கா குறிப்பிட்டார்.