சட்டத்தரணிபோல் வந்த துப்பாக்கிதாரியை கைது செய்ய தேடுதல் வேட்டை!

கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பாதாள குழு தலைவரான கனேமுல்ல சஞ்ஜீவ என்றழைக்கப்படும் சஞ்ஜீவ குமார சமரரத்ன இன்று முற்பகல் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை வளாகத்திலிருந்து வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் வருகை தந்திருந்த நிலையில், நீதிமன்றத்துக்குள் வைத்து அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தது.

சட்டத்தரணிபோல் வேடமிட்டுவந்திருந்த நபரே துப்பாக்கிச்சூட்டை நடத்தி தப்பிச்சென்றுள்ளார். அவரை கைது செய்வதற்குரிய விசாரணை வேட்டை ஆரம்பமாகியுள்ளது.

நீதிமன்ற வளாகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles