‘சட்டவிரோதமாகவே கிண்ணியாவில் இழுவைப் படகு சேவை முன்னெடுப்பு’ – அம்பலமானது தகவல்

“கப்பல் பாதை விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு கிண்ணியா நகரசபையே பொறுப்புக்கூறவேண்டும்.” – என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கப்பல் பாதை சேவையை முன்னெடுப்பதற்கு கிண்ணியா நகரசபை எம்மிடம் அனுமதி கோரியிருந்தாலும் அதற்கு நாம் அனுமதி வழங்கவில்லை. அவ்வாறான சேவையை முன்னெடுக்க வேண்டாம் என திட்டவட்டமாக அறிவித்திருந்தோம்.

பாலம் அமைக்கப்படும்வரை மாற்றுபாதையை பயன்படுத்துமாறு வலியுறுத்தினோம். இதன்படி மக்கள் மூன்றரை கிலோமீற்றர் தூரமான பாதையை பயன்படுத்தினர்.

இந்நிலையிலேயே சட்டவிரோதமான முறையில் குறித்த கப்பல் பாதை சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கிண்ணியா நகரசபையின் நகரசபையே பொறுப்புக்கூறவேண்டும். இவர் இம்ரான் மஹ்ரூப்பின் மச்சான் ஆவார். கிண்ணியா நகரசபையின் தவிசாளர் பதவி உடன் நிறுத்தப்பட வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles