நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக இரு மாடுகாளை கொண்டு சென்ற மூவரை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நோர்வூட் மாநெலு பகுதியில் இன்று (04) அதிகாலை 5.50 மணி அளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் சந்தேகத்திற்கு இடமான முறையில் லொறி ஒன்று வருவதனை கண்டு சோதனை செய்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மஸ்கெலியா சாமிமலை பகுதியிலிருந்து பொகவந்தலா பகுதிக்கு மாடுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன என்று பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .
பசு மாட்டினையும் கன்றினையும் வளர்ப்பதற்காவே கொண்டு செல்வதாக வாக்கு மூலம் அளித்துள்ள போதிலும் இறைச்சிக்காக கொண்டு சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த இரண்டு மாடுகள் மற்றும் கொண்டு பயன்படுத்தப்பட்ட லொறி ஆகியன பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளன.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்










