சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 1,024 பேர் கைது!

இலங்கையில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்ட ஆயிரத்து 24 பேர் இலங்கை கடற்பரையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2022 ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே மேற்படி கைதுகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உட்பட சில நாடுகளுக்கு கடல் மார்க்கமாக செல்ல முற்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, சட்டவிரோத குடியேற்ற வாசிகளுக்கு ஆஸ்திரேலியாவில் இடமில்லை என அந்நாட்டு அதிகாரிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles