சட்ட விரோதமான முறையில் 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையிலிருந்து சட்ட விரோதமான முறையில்  7 பேர் தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 7பேரும் படகின் மூலம் இன்று காலை தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் கட்டை தீடை பகுதியை சென்றடைந்துள்ளனர்.

வவுனியா மற்றும் திருகோணமலை பகுதிகளை சேர்ந்த நபர்களே இவ்வாறு தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் இவ்வாறு சட்டவிரோத முறையில் தமிழகத்தில் புலம்பெயர்கின்றமை குறிப்பிடதக்கது.

குறித்த நபர்களிடம் விசாரணைகள் மேற்கொண்ட பின் அவர்கள் மறுவாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles