எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்னாள் எம்.பிக்களான அப்துல்லா மஹ்ரூப் மற்றும் சதாசிவம் ஆகியோர் தீர்மானித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து குறுகிய காலத்துக்குள் நாட்டை மீட்டெடுத்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆளுமையே இந்த நாட்டுக்குத் தேவையென்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து முன்னாள் எம்.பி. சதாசிவம் தெரிவித்ததாவது;
இரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது நாடு அதலபாதாளத்தில் வீழ்ந்ததை நாம் மறக்கவில்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்த போது படிப்படியாக மீளக் கட்டியெழுப்பியுள்ளார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதாரத்தைப் போன்று நாட்டு மக்களின் பொருளாதாரத்தையும் புரிந்து கொண்ட அறிவார்ந்த தலைவரென ரணில் விக்கிரமசிங்கவை அறிமுகப்படுத்தலாம். முன்னாள் எம்.பி. அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்ததாவது:
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்திருந்தாலும் அந்த தீர்மானத்துக்கு உடன்படவில்லை.கட்சித் தலைவர் றிசாத் பதியுதீனுக்கு தனது தீர்மானத்தை தெரிவித்துள்ளேன்.
எனது ஆதரவாளர்களில் 95 வீதமானவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்க்கு ஆதரவளிக்க விரும்புவதாக ஆறு மாதங்களாக கூறி வருகின்றனர். அவ்வாறான நிலையில் ஜித் பிரேமதாசவை நான் எவ்வாறு ஆதரிக்க முடியும் என்றார்.