சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

ஹபராதுவ, உனவடுன மாவட்டத்தில் ஹோட்டல் விருந்தினர்களிடமிருந்து வெளிநாட்டு நாணயங்களை திருடிய சம்பவம் தொடர்பில் தேடப்படும் நபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் ஆதரவை பொலிஸார் கோரியுள்ளனர்.

ஜனவரி 1, 2023 அன்று நடந்த இந்த சம்பவம் தொடர்பாக ஹோட்டலின் உரிமையாளர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரு ரஷ்ய பெண் மற்றும் இரண்டு விருந்தினர்கள் ஹோட்டலில் தங்கியிருந்தனர், மேலும் சந்தேக நபர்கள் அவர்களிடமிருந்து 16,100 அமெரிக்க டாலர்கள், 195,000 ரஷ்ய ரூபிள் மற்றும் 200 யூரோக்களை திருடிச் சென்றுள்ளனர்.

பொலிஸாரின் மேலதிக விசாரணையில் நாகியதெனிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய மற்றுமொருவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

சந்தேக நபரைப் பிடிக்க உனவடுன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளனர்.

சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் 076 – 8477810 என்ற இலக்கத்தின் ஊடாக உனவட்டுன பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles