சந்தையில் பால்மாவிற்கு தட்டுப்பாடு இல்லை! அமைச்சர் ரமேஸ் பத்திரன

சந்தையில் பால்மாவிற்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.

அங்காடிகளில் பால்மாவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், போதுமானளவு பால்மால் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சந்தையில் பால்மாவிற்கு தட்டுப்பாடு இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் பரவிவரும் செய்திகள் குறித்து கேட்டுபோது, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

பால்மாவிற்குத் தட்டுப்பாடு இருப்பதாக அரசாங்கத்திற்குத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், அரசாங்கம் உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதிலும் அதீத கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் ரமேஸ் பத்திரன குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles