வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தை தவிர்க்க தவறியமை மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதி தற்போது ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இராஜாங்க அமைச்சர் பயணித்த ஜீப் மோதிய கொள்கலன் சாரதியும் நேற்று (25) கைது செய்யப்பட்டார்
