சனல் – 4 வீடியோ குறித்து சர்வதேச விசாரணை கோருகிறார் மைத்திரி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் – 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இன்று வலியுறுத்தியுள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன.

” சனல் 4 ஊடாக வெளியிடப்பட்டுள்ள தகவல்களை நூறு வீதம் ஏற்கவும் முடியாது, அதேபோல நிராகரித்துவிடவும் முடியாது. எனவே சனல் 4வில் கூறப்பட்டுள்ள விடயங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏனெனில் இங்கு விசாரணையை ஒப்படைத்து சரிவராது, இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் திருப்தியும் இல்லை.

சனல் – 4 காணொளி குறித்து விசாரணை அவசியம் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது  ஐநாவின் கோரிக்கையின் பிரகாரம் சர்வதேச விசாரணை நடத்துவதே சிறந்தது.” – எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles