சப்ரகமுவ பல்கலைக்கழகம் 2020/2021 கல்வியாண்டில் மாணவர்கள் தவிர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, 2020/2021 கல்வியாண்டில் உள்ள மாணவர்கள் தவிர அனைத்து மாணவர்களும் தங்கும் விடுதிகளை காலி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இன்று (16) மாலை 4 மணிக்குப் பிறகு மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருக்க முடியாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் ஆண்டு மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று தாக்கியதை அடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைகலப்பில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விடுதியில் தங்கியிருந்த முகாமைத்துவ பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் குழுவொன்று நேற்று (15) இரவு மற்றுமொரு மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, காயமடைந்தவர்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களை கைது செய்ய சமனலவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.