சமஷ்டி அரசமைப்புக்கு ஒருபோதும் இடமளியோம்!

“ஒற்றையாட்சியை பாதுகாப்பதற்கு 29 ஆயிரம் படையினர் உயிர் தியாகம் செய்துள்ளனர். எனவே, இந்நாட்டில் சமஷ்டி கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.” -என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த உறுப்பினரான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

” 2015  நல்லாட்சிகாலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அரசமைப்பு பணி இறுதிப்படுத்தப்படும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கியுள்ளார். இலங்கை மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் எனவும், மாகாண சபைகளுக்குரிய அதிகாரம் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாகாண சபையில் நிறைவேற்றப்படும் சட்டங்களை மத்திய அரசாங்கம் இரத்து செய்ய முடியாது.

மாகாண இணைப்புக்குரிய அதிகாரமும் மாகாண சபைக்கு செல்லும். எல்லை நிர்ணயம்கூட மாகாணசபை வசம் செல்லும் வகையில் ஏற்பாடுகள் உள்ளன. எனவே, 2015 அரசமைப்பு அமுலுக்கு வந்தால் இலங்கை சமஷ்டி நாடாக மாறும். நாடாளுமன்ற அதிகாரம் குறையும். எனவே, இதற்கு இடமளிக்க கூடாது.

ஒற்றையாட்சியை பாதுகாப்பதற்கு படையினர் உயிர்தியாகம் செய்துள்ளனர். எனவே, சமஷ்டி முறைமைக்கு இடமளிக்கமாட்டோம். தமிழ் டயஸ்போராக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நாம் தயாரில்லை.

ஆட்சியாளர்கள் கள்வர்கள் எனக் கூறியே அநுர தரப்பு ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்னும் கள்வர்கள் பிடிபடவில்லை. இதன்மூலம் அவர்கள்கூறியது பொய்கள் என்பது உண்மையாகியுள்ளது.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles