‘சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த விரைவில் புதிய சட்டம்’

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த தேவையான புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களை முறைப்படுத்துவதற்காக சட்ட ஆணைக் குழுவால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டங்களை அதற்காக அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் நீதியமைச்சர் கூறினார்.

சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டவர்களின் செய்தியறிக்கைகளை கவனத்தில் கொண்டுள்ளதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

” ஏற்கனவே சட்ட ஆணைக்குழு முன் வைத்துள்ள விதிமுறைகளின் அடிப்படையில் சமூக ஊடகங்களை முறைப்படுத்துவதற்கு குறித்த சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது.

அதேவேளை, பௌத்த மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட ஏனைய மதத்தலைவர்களை அவமதிக்கும் வகையில் யூடியூப் மற்றும் முகநூல்கள் ஊடாக பதிவுகள் மேற்கொள்ளப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள கூற்றையும் நீதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடைமுறையை விரைவாக அமுலுக்கு கொண்டுவர வேண்டும் என குறிப்பிட்டுள்ள அமைச்சர், ஒருபோதும் சமூக வலைத்தளங்கள் மூலம் நாட்டின் கௌரவ மிக்க மதத் தலைவர்கள் மற்றும் ஏனனையவர்களது வாழ்விற்கு பாதிப்பை ஏற்படுத்த இடமளிக்க முடியாது. அதே வேளை மக்களின் சுதந்திரத்திற்கு சேறு பூசும் செயற்பாடுகளை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு செயல்படுவதன் மூலம் அவர்கள் ஹீரோக்களாக தம்மை பிரபலப்படுத்திக் கொள்வதற்கும் முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் பெரும்பாலானோர் மோசமான அரசியல் மற்றும் மத நிகழ்ச்சி நிரலுடன் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். அவர்களின் இந்த செயற்பாடுகள் மற்றும் விமர்சனங்கள் நாட்டிற்கு அழிவையே ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த தேவையான புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

Related Articles

Latest Articles