நுவரெலியா நகருக்கு ‘லாப்’ சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிவந்த கனரக வாகனம், இயந்திர கோளாறு காரணமாக பழுதடைந்த நிலையில் – முன்னோக்கி நகர முடியாமல் நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியில நின்றுள்ளது. இதனால் குறித்த வீதியில் போக்குவரத்து தடைபட்டது.
வீதியின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
சுமார் இரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து கனரக வாகனம், சீர்செய்யப்பட்டு அங்கிருந்து அகற்றப்பட்டது. நுவரெலியா போக்குவரத்து பொலிஸாரின் உதவியுடன் போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.
நானுஓயா நிருபர்