சம்பந்தன் கடிதம் அனுப்பியும் ஜனாதிபதியிடமிருந்து பதில் இல்லை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையில் சந்திப்பை மேற்கொள்வது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனால் அனுப்பட்டுள்ள 2ஆவது கடிதத்துக்கும் ஜனாதிபதியிடமிருந்து இன்னும் பதில் கிடைக்கப்பெறவில்லை என தெரியவருகின்றது.

சம்பந்தன் கடிதம் அனுப்பி ஒருவாரம் கடந்துள்ளபோதிலும் பதில் எதுவும் வழங்கப்படவில்லை என கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

கூட்டமைப்பினருக்கும், ஜனாதிபதிக்குமிடையில் ஜுன் 16 ஆம் திகதி சந்திப்பு நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், சந்திப்பை ஜனாதிபதி திடீரென பிற்போட்டார். திகதி விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

எனினும், பதில் எதுவும் வராததால்தான் கடந்த 14 ஆம் திகதி சம்பந்தன் மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலும் தமிழர்களின் சமகால பிரச்சினைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடுவதற்கே கூட்டமைப்பு சந்தர்ப்பம் கோரியுள்ளது.

Related Articles

Latest Articles