” நாட்டை மீட்பதற்கான உரிய வழிகாட்டல்கள் அடங்கிய வேலைத்திட்டம் முன்வைக்கப்படுமானால் சர்வக்கட்சி அரசுக்கு ஆதரவு வழங்கப்படும்.” – என்று விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திரன முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர எம்.பி. தெரிவித்தார்.
எனினும், தனி நபர்களை திருப்திப்படுத்தவும், அமைச்சு பதவிகளுக்காகவும் சர்வக்கட்சி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது எனவும் அவர் கூறினார்.