சர்வதேச சிலம்பப் போட்டியில் தங்கம் வென்ற மலையக வீரனுக்கு பிரதி அமைச்சர் பிரதீப் தலைமையில் பாராட்டு விழா!

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த மலையகத்தின் பெருமைக்குரிய முத்துக்குமார் கபில பிரசாத் குமாருக்கு பாராட்டும் கௌரவிப்பு நிகழ்வும் நேற்றைய தினம் (23) பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் நடைபெற்றது.

தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றாலும், எமது பாரம்பரிய வீரக்கலையான சிலம்பத்தை மறவாமல் சர்வதேச அரங்கில் நிலைநாட்டியுள்ள இந்த வெற்றி ஒட்டுமொத்த மலையக மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

“உங்களது அர்பணிப்பும் விடாமுயற்சியும் எமது இளைய தலைமுறைக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகவும், மலையக இளைஞர்களின் தன்னம்பிக்கைக்குச் சான்றாகவும் விளங்குகின்றது. தாய்நாட்டிற்கும் சமூகத்திற்கும் உலகளவில் பெருமை சேர்த்த உங்களது ‘தற்காப்புக் கலைப்’ பயணம் மேலும் பல சிகரங்களைத் தொட வாழ்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டார்.

மேலும், திறமையானவர்களுக்கு கட்டாயம் அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கு இது ஒரு பெரும் சான்றாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் சிவானந்த ராஜா, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பன்னீர்செல்வம், இலங்கை ஐயப்ப சுவாமிகளின் மகாசபையின் குருசுவாமி ரவீந்திரன் குரு சுவாமி, தமிழ்நாடு உலக தமிழர் சங்கம் சென்னை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கலாநிதி T. இளங்கோவன், கொழும்பு செட்டியார்தெரு எவர்க்ரீன் விளையாட்டு கழகத்தின் தலைவர் உள்ளிட்ட அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles