சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 81 ஆண்களுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என தெரிவிக்கப்படுகின்றன.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் ஏமன் நாட்டை சேர்ந்த ஏழு பேர் மற்றும் சிரியா நாட்டை சேர்ந்த ஒருவரும் அடங்குவர் என தெரிவிக்கப்படுகின்றன.

அதிக எண்ணிக்கையில் மரண தண்டனை விதிக்கும் நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாகவும் இந்த பட்டியல் அம்னெஸ்டி இன்டர்நேஷ்னலால் தொகுக்கப்பட்டது. முதல் நான்கு இடங்களில் இருக்கும் நாடுகள் சீனா, இரான், எகிப்து மற்றும் இராக் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த வருடம் 69 பேருக்கு சவூதி அரேபியாவின் மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles