முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷீ வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள கடவுச்சீட்டு தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கொழும்பு நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மே 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் போலி பெயர் மற்றும் பிறந்த திகதி அடங்கிய ஆவணங்களை சமர்ப்பித்து இராஜதந்திர கடவுச்சீட்டுகளை மோசடியாகப் பெற்றதாக சஷீ வீரவன்ச மீது குற்றப்புலனாய்வு பிரிவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
