21/4 தற்கொலை குண்டு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹதியா என்பவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதனையடுத்து அவர் பொலன்னறுவை, வெலிகந்தையிலுள்ள கொரோனா விசேட சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சஹ்ரானின் மனைவிக்கு கொரோனா தொற்றியுள்ளது. அத்துடன், அவருடன் வெலிகடை சிறைச்சாலையிலிருந்த மேலும் 28 தொற்றாளர்களும் வெலிக்கந்தயிலுள்ள கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.