மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஒல்டன், பெயர்லோன் ஆகிய இரு தோட்டங்களில் 67 பேரிடமிருந்து இன்று பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
ஒல்டன் தோட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் தலைநகர் கொழும்பில் இருந்து கடந்த 15 ஆம் திகதி தனது வீட்டிற்க்கு வந்த போது கலுகல பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் முடிவு நேற்று 22 ஆம் திகதி கிடைக்க பெற்ற போது அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை தெரியவந்தது.
அவர் அம்பாந்தோட்டை சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுடன் தொற்றாளியானவர் தோட்டத்தில் பலரிடம் நெருங்கி பழகியதால் அவரை சார்ந்த 67 பேரை பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதுடன் அவர்களை 14 நாட்களுக்கு தனிமை படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார மேற்பார்வை அதிகாரி பி.ஏ.பாஸ்கரன் தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்
