சாரதிமீது கொலைவெறித் தாக்குதல்! டியன்சின் நகரில் விஷமிகள் வெறியாட்டம்!!

பொகவந்தலாவை – ஹட்டன் பிரதான வீதியில் உள்ள டியன்சின் நகரில் வைத்துஇ குடிபோதையில் இளைஞர்கள் சிலர் சாரதி ஒருவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த 27 வயதுடைய சாரதி பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் காயமடைந்த சாரதியின் நிலைமை மோசமாக இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுஇ கடந்த 26ஆம் திகதி தோட்டப் புறங்களில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு பொருள்களை விநியோகிக்க குறித்த சாரதியும் லொறி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில்இ டியன்சின் நகரில் வைத்து இளைஞர்கள் சிலர் குடிபோதையில் நடுவீிதியில் வேண்டும் என்றே நடந்து சென்றுள்ளனர்.

எதிரே வந்த லொறியின் சாரதி ஓன் அடித்து அவர்களை வாகனத்துக்கு வழிவிடுமாறு கோரியுள்ளார்.

எனினும் குடிபோதையில் இருந்த இளைஞர்கள் சாரதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாரதியையும் தாக்கிஇ அவரது பையிலிருந்த பணத்தையும் களவாடி சென்றதாக சாரதி பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தாக்குதலில் சாரதியின் கண்இ கைஇ கழுத்து பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொகவந்தலாவை பொலிஸார் சம்மபந்தபட்ட இளைஞர்களை நேற்று இரவு கைது செய்துள்ளனர். அவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் இருப்பதாகவும்இ டியன்சின் நகரில் இவர்கள் ரவுடிகளை போல தொடர்ந்து நடந்துகொள்வதாகவும் பாதிக்கப்பட்ட பலர் குற்றம் சுமத்துகின்றனர்.

 

 

 

Related Articles

Latest Articles