சாரதியின் உடல் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பிவைப்பு

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை ஊடாக நேற்று முன் தினம் (15) மாலை நாவலப்பிட்டிக்கு சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக பேருந்தை செலுத்தி செல்லும் வேளையில் உயிரிழந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறைந்த அளவிலான பயணிகளை சாரதியும் நடத்துனர் மாத்திரமே நுவரெலியாவிலிருந்து பேருந்தை செலுத்தி வந்துள்ளனர்

அப்போது, லிந்துலை மட்டுக்கலை சந்திக்கு அருகில் பேருந்து​​ வீதியில் சென்றுக்கொண்டிருந்த போது சாரதிக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சாரதி பேரூந்தை வீதியோரத்தில் ஓரம் கட்டிய போது பேரூந்தின் முன் சக்கரம் வீதியில்
காணப்பட்ட கல்லில் மோதி நிறுத்தப்பட்டுள்ளது .

இந்நிலையில் பேருந்தின் நடத்துனர் சாரதியை பார்த்தபோது சாரதி தனது ஆசனத்தில் நெஞ்சு பகுதியை பிடித்தவாறு அமர்ந்தவாரே கிடந்துள்ளார். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக லிந்துலை பொலிஸாருக்கு தகவல் வழங்க சம்பவ இடத்துக்கு வந்த லிந்துலை பொலிஸார் சாரதியை லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் அட்டபாகே, உலகம, மெதகொடுவ பிரதேசத்தை வசிப்பிடமாகவும், நாவலப்பிட்டிய இலங்கை போக்குவரத்து டிப்போவின் சாரதியாகவும் பணியாற்றிய சுரங்க அருணசிறி ஆத்தனகே (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் நுவரெலியா பிரதான பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து நேற்று முன் தினம்(15) மாலை தலவாக்கலை வீதியின் ஊடாக நாவலப்பிட்டியவை நோக்கி பேருந்தை செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் அவர் செலுத்திய பேரூந்து இரண்டு முறை இயந்திர கோளாறு காரணமாக வெவ்வேறு இடங்களில் திருத்தப்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டாவது முறையாக லிந்துலை மட்டுக்கலை சந்திக்கு அருகில் பேருந்தை செலுத்திக்கொண்டிருந்தபோது இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது சாரதிக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டு மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் சாரதியின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு (16) பிரேத பரிசோதணை இடம்பெற்றது .

இதில் சாரதியின் உடல் பாகங்கள் சில பெறப்பட்டு சட்ட வைத்தியரின் உத்தரவின் பேரில் அரசாங்க இரசாயன பகுப்பாய்வு பிரிவுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் சடலம் பாதுகாப்பான இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்ட பின் சாரதியின் உடல் அவரின் மனைவிடம் கையளிக்கப்பட்டு மாலை கெட்டபுலா கடியன்லேஹின்ன பகுதியில் வசிக்கும் அவரின் மனைவியின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
-ஆ.ரமேஸ்-

Related Articles

Latest Articles