சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிடும் பணி அடுத்தவாரம் ஆரம்பம்

அடுத்த வாரம் முதல் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சடிக்கும் பணியை ஆரம்பிக்கவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் ஜேர்மனியில் இருந்து 5 இலட்சம் அட்டைகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.இதுவரை தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள 06 இலட்சம் பேருக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளதாக மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். தற்போது வெளிநாடு செல்வோருக்கு மாத்திரமே சாரதி அனுமதிப்பத்திரங்கள் அட்டைகளில் அச்சிடப்பட்டு வழங்கப்படுவதாகவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles