சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை இலங்கைக்கு அழைக்க தீர்மானம்!

2023 பெப்ரவரி 04 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு, சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்ட ஏற்பாட்டுக் குழுவின் முதலாவது கூட்டம் நேற்று (07) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போதே சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், சார்க் வெளிவிவகார அமைச்சர்களை அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles