லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெமலியர் தோட்டத்தில் பெண் தொழிலாளி ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி, படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
லெமலியர் தோட்டத்தை சேர்ந்த பி.சத்தியவாணி (வயது 36) என்பரே இவ்வாறு சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இன்று பிற்பகல் 1.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியின் லிந்துலை நகரை அண்மித்த தேயிலை தோட்டத்தில் பணியில் ஈடுப்பட்டிருந்தவேளையிலேயே, தேயிலை மலையில் பதுங்கியிறுந்த சிறுத்தை, சீறிப்பாய்ந்து அவரை தாக்கியுள்ளது.
அவ்வேளையில் அருகில் தொழில் செய்துகொண்டிருந்ந சக தொழிலாளிகள் கூச்சலிட்டு சிறுத்தையை துரத்தியதுடன் , காயமடைந்த பெண்னை மீட்டு லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். பின்பு மேலதிக சிகிச்சைக்காக அவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கௌசல்யா
