சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது

வெலிகமவில் 10 வயது சிறுமி  ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நான்கு பேரை, பெப்ரவரி 15 புதன்கிழமை,  பொலிஸார்  கைது செய்தனர்

இலங்கை பொலிஸாரின் கூற்றுப்படி, பெப்ரவரி 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை டியூஷன் வகுப்பிற்குச் செல்லும் சிறுமி சந்தேக நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததுடன், சந்தேகநபர்கள் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் தனது யோனி பகுதியில் ஏற்பட்ட காயங்களை தனது தாயிடம் தெரிவித்தார், பின்னர் தாய் உள்ளூர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

20 வயதுடைய நான்கு சந்தேக நபர்களும்  15 புதன்கிழமை மாலை காவலில் வைக்கப்பட்டனர்.

துஷ்பிரயோகத்திற்கு ஆளானவர் பரிசோதனைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், பொலிசார் சிறுமி க்கு எதிரான குற்றத்தை விசாரித்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles