சிறுவன் செலுத்திய மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி!

மஹியங்கனை, பகரகம்மன பகுதியில் இன்று (14) பிற்பகல் 15 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், ஆட்டோவுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆட்டோவில் பயணித்ததாக கூறப்படும் தம்பகொல்ல, மாபகதேவாவ, மஹியங்கனை பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பகொல்ல மற்றும் மாபகதேவ பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படும் இருவரே காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் ஒருவர் 20 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது 15 வயதுடைய சிறுவனே மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றதாகவும் இருவரும் மஹியங்கனை வைத்தியசாலையின் 8 ஆம் இலக்க வார்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் மஹியங்கனை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles