இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய இரண்டு கைதிகள் சித்தியடைந்துள்ளனர்.
இந்த வருடம் மகசீன் சிறைச்சாலையிலிருந்து மூன்று கைதிகள் உயர்தரப் பரீட்சையில் தோற்றியதாக சிறைச்சாலையின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்
பல்வேறு குற்றச்சாட்டின் பேரில் சிறைக்கு அனுப்பப்படும் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து அவர்களை நல்ல குடிமக்களாக மாற்றும் முக்கிய நோக்கத்துடன் சிறைச்சாலை திணைக்களத்தின் பூரண ஈடுபாட்டுடன் கைதிகள் பரீட்சைக்கு அனுமதிக்கப்படுவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
பரீட்சைக்குத் தோற்றிய முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினரான கிளிநொச்சியை சேர்ந்த 38 வயது கைதி 2 A 1 S பெறுபேறுகளை பெற்றுள்ளதாகவும், கேகாலையைச் சேர்ந்த 46 வயதான கைதி, 3 S பெறுபேறுகளை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
