சிவனொளிபாதமலை யாத்திரையில் பொலித்தீன், பிளாஸ்டிக் எடுத்துச் செல்ல கட்டுப்பாடு

சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் டிசம்பர் மாதம் போயா தினத்தில் ஆரம்பமாகிறது. இக்காலத்தில்,பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கொண்டு செல்வதை கட்டுப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்தார்.

ஒவ்வொரு யாத்திரை காலத்தின் முடிவிலும் நூற்றுக்கணக்கான தொன் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக்கள் ஸ்ரீபாத மலை சுற்றுச்சூழலில் சேர்கின்றன. இதனால், இவற்றை அகற்றுவதற்கு மஸ்கெலியா பிரதேச சபைக்கு நுவரெலியா மாவட்ட செயலகம் வருடாந்தம் 02 மில்லியன் ரூபாவை வழங்குவதாகவும் அவர் கூறினார்.

சிவனொளிபாதமலை சுற்றுச்சூழலில் சேரும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க முடியாதுள்ளது. இதனால், கழிவுகளில் சில பகுதி சுற்றுச்சூழலில் சேர்கின்றன. இந்நிலையில், இவை சிதைவடையாததால் சுற்றுச்சூழலும், அங்கு வாழும் விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் மாவட்ட செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles