‘சீண்டிய இருவருக்கு கடும் சீற்றத்துடன் பதிலடி கொடுத்த ஜீவன்’

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எடுத்த முடிவை சவாலுக்குட்படுத்திய ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இருவருக்கு, இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி மாநாட்டை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் புறக்கணித்தது. அரச பங்காளிக்கட்சியின் இந்த நகர்வானது அரசுக்கு பெரும் தலையிடியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சர்வக்கட்சி மாநாட்டை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் புறக்கணித்தமை தொடர்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானை, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இருவர் திட்டியுள்ளனர் .

நாடாளுமன்ற உணவகத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இளம் அமைச்சர் ஒருவரும், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருமே ஜீவன்மீது சொற்கணை தொடுத்துள்ளனர். இதற்கு ஜீவன் தொண்டமானும் கடுந்தொனியில் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

” காங்கிரஸ் என்றும் மக்கள் பக்கம் இருந்தே முடிவெடுக்கும். எப்படியான முடிவை எடுக்க வேண்டும் என எமக்கு எவரும் பாடம் கற்பிக்க வேண்டியதில்லை. கட்சி எடுக்கும் முடிவின் பிரகாரமே நாம் செயற்படுவோம்.” – என்றுள்ளார் ஜீவன்.

Related Articles

Latest Articles