சீதுவையில் 26 வயது பெண் கொலை: பிரதான சந்தேக நபர் கைது!

சீதுவ, முத்துவாடிய பகுதியில் வாடகை அறையொன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பலாங்கொடை வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (17) அளவுக்கதிகமான மருந்தை உட்கொண்டு பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

26 வயதுடைய பெண்ணொருவரே கொலை செய்யப்பட்டிருந்தார்.

எம்.எப்.எம். அலி

Related Articles

Latest Articles