பிளவுகளை நிராகரிப்பதற்கும் பொருளாதார மீள்தன்மை மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்கான உத்திகள் தொடர்பில் ஹிரோஷிமாவில் G7 தலைவர்கள் எடுத்த தீர்மானங்களுக்கு இலங்கை தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம், வளரும் நாடுகள் உட்பட உலகளாவிய பங்காளிகளுடன் உரையாடலில் ஈடுபடுவதற்கும், ஒத்துழைப்பு அணுகுமுறையை கடைப்பிடிப்பதற்கும் G7 குழு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அதற்காக உலக வர்த்தக அமைப்பின் விதிகள் அடிப்படையிலான பலதரப்பு வர்த்தக முறையை பின்பற்றுவது பொருத்தமானது டோக்கியோவில் நடைபெற்ற ‘நிக்கேய்’ மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
அதேவேளை, ஜப்பானின் ஒத்துழைப்பு அணுகுமுறைக்கு தனது ஆதரவை வெளிப்படுத்திய ரணில் விக்கிரமசிங்க, ஜப்பான், சீனா, இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கிடையில் திறந்த உரையாடலுக்கும் அழைப்பு விடுத்தார். அமைதியான,சபீட்சமான ஆசிய பிராந்தியம் உருவாவதற்கு இது ஒரு தீர்க்கமான காரணியாகும் என்றும் ரணில் சுட்டிக்காட்டினார்.
