அவிசாவளை, புவக்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு மூவர் உயிரிழந்துள்ளனர். 78, 36 மற்றும் 07 வயதான மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெண் ஒருவரும், சிறுமி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்படி சீரற்ற காலநிலையால் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 11 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.