சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், ஐவர் மாயமாகியுள்ளனர்.
மாத்தறை மாவட்டத்தில் நால்வரும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஐவரும், கொழும்பு மாவட்டத்தில் மூவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சீரற்ற காலநிலையால் 87 ஆயிரத்து 379 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 ஆயிரம்பேர்வரை இடம்பெயர்ந்துள்ளனர்.










