சீரற்ற காலநிலையால் சப்ரகமுவ மாகாணத்தில் 188 குடும்பங்களைச் சேர்ந்த 714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
184 வீடுகள் பகுதிளயவும் சேதமடைந்துள்ளன. 6 வர்த்தக நிலையங்களும் சேதமடைந்துள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தில் 95 குடும்பங்களைச் சேர்ந்த 357 பேரும், கேகாலை மாவட்டத்தில் 93 குடும்பங்களைச் சேர்ந்த 357 பேரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.