சீரற்ற காலநிலையால் வடக்கு, கிழக்கில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் 5 மாகாணங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 200 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 958 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், சீரற்ற காலநிலையால் 849 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 800 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

61 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

சீரற்ற காலநிலையால் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கில் மட்டும் 5 ஆயிரத்து 625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles