யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 3, 346 குடும்பங்களைச் சேர்ந்த 12,257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழை, வெள்ளத்தால் ஏழு வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
சீரற்ற காலநிலையால் புத்தளம் மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3,341 குடும்பங்களைச் சேர்ந்த 12,237 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.