சீரற்ற காலநிலையால் 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு – 455 வீடுகள் சேதம்!

நாட்டில் 10 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 6 ஆயிரத்து 250 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம், மண்சரிவால் காற்றால் இரு வீடுகள் முழுமையாகவும், 453 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

31 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலையால் மேல் மற்றும் தென் மாகாணங்களில் உள்ளவர்களே கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles