‘சுதந்திரக்கட்சியே தாய்க்கட்சி’ – மொட்டு கட்சிக்கு துமிந்த பதிலடி!

” மொட்டு கட்சியின் தாய்வீடுகூட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிதான். எனவே, அக்கட்சியை அழிக்க முடியாது.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

” தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் சிலருக்குஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று சிறிய கட்சியாக தெரியலாம். இதுதான் தாய்க்கட்சி என்பதை மறந்துவிட்டே அவர்கள் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

மாகாண மற்றும் உள்ளாட்சிமன்றத் தேர்தல்களின்போது நாம் பலத்தை காட்ட வேண்டும். மாறாக அரசு கவனிப்பதில்லையென கவலையடைந்துகொண்டிருப்பதில் பயன் இல்லை.” – எனவும் குறிப்பிட்டார் துமிந்த திஸாநாயக்க.

Related Articles

Latest Articles