சுனாமியில் உயிரிழந்த உறவுகளுக்கான 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் மலையகத்திலும் இன்று முன்னெடுக்கப்பட்டது.
ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் உள்ள புத்தர் சிலைக்கு மலர் வைத்து விளக்கேற்றி பொது மக்கள், அஞ்சலி செலுத்தினர்.
குறித்த அஞ்சலி நிகழ்வில் ஹட்டன் பொலிஸாரும் கலந்துகொண்டனர். வீதியில் சென்ற வாகனங்களும் நிறுத்தப்பட்டு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த அஞ்சலி நிகழ்வின் போது காகங்கள் கரைந்தவாறு கூட்ட கூட்டமாக வட்டமிட்டமை குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்
