சுமந்திரனுக்கு சவால் விடுத்துள்ள இ.தொ.கா. தலைவர்

இலங்கை தொழிலாளர் காங் கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு அ ர சி ய ல் தொலை நோக்கு தெரியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

” இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ச ஆட்சி முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதாக சுமந்திரன் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைப் போல் வாயில் அரசியல் பேசுபவர்கள் நாங்கள் கிடையாது.

யாழ்.பொது நூலகத்தை எரித்த ஐக் கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து ஆட்சியை அமைக்க ஆதரவு வழங்க முடியும் என்றால், அதைவிட அரசாங்கத்திலிருந்து நாங்கள் வெளியேறுவது அருமை பெரிய விடயமாக அமையாது.

ஜீவன் தொண்டமானை மக்கள் நாடாளுமன்றம் அனுப்பியமை மக்களுக்குவேலை செய்வதற்கே தவிர அரசாங்கத்தில் இருந்து வேடிக்கை பார்ப்பதற்கு அல்ல.

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் 15 வருடகாலம் இணைந்துபணியாற்றியுள்ளோம். அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியுடன் 20 வருடங்கள் பணியாற்றியுள்ளோம்.

எமது கொள்கை மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதே தவிர ஆட்சியாளர்கள் யார் என்பதைக் கருத்தில் எடுப்பதில்லை.

அந்த வகையில் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து நமது மக்களுக்கு தொடர்ந்தும் பணியாற்ற முடியாத சூழ்நிலையில் நேரடியாக பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னர் அரசாங்கத்திலிருந்து வெளியேறினோம்.

சுமந்திரனுக்கு நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன். நீங்கள் உங்கள் மக் களுக்கு ஆற்றிய சேவையை நான் மாகாணசபை அமைச்சராக இருந்து ஆற்றிய சேவையுடன் முடிந்தால் ஒப்பிட்டு பார்க்க வாருங்கள். பன்னிரண்டு வருட காலமாக 13
ஆவது திருத்தச் சட்டத்தை பற்றி பேசுகிறீர்கள். அதனை நிறைவேற்ற முடியவில்லை.

சிறையில் அரசியல் கைதிகள் வாழ்கின்றார்கள். அவர்களை கூட கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் விடுவிக்க முடியவில்லை. இரவில் பிரதமரையும் ஜனாதிபதியும்
சந்திக்கும் சிலரால் மக்களின் தேவைகளை பற்றி பேச முடியாமை கவலை அளிக்கிறது.” – என்றார்

Related Articles

Latest Articles