சுற்றுலாத்துறையை தடையின்றி கொண்டு செல்ல விசேட கலந்துரையாடல்

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினைக்கு மத்தியில் சுற்றுலாத்துறையை தடையின்றி கொண்டு செல்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் வர்த்தக, மின்சார, வலுசக்தி மற்றும் போக்குவரத்து அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது சுற்றுலா பேருந்துகள் மற்றும் வாகனங்களுக்கு எரிபொருளை வழங்குவது தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அத்துடன் மின்சாரம் மற்றும் எரிவாயு விநியோகத்தடையால் ஏற்படுகின்ற பிரச்சினைகளை தவிர்ப்பது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

Related Articles

Latest Articles