செப்டம்பர் 18 ஜனாதிபதி தேர்தல் – முன்னாள் தேர்தல் ஆணையர் யோசனை

“ மக்கள் தேர்தலை கோருவதால் செப்டம்பர் 18 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்துவது பொருத்தமான காலப்பகுதியாக அமையும்.” என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

“உங்கள் அனுபவத்தின் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான காலப்பகுதி எதுவென கருதுகின்றீர்கள்.” என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ செப்டம்பர் 17 மற்றும் ஒக்டோபர் 17 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும்;. அப்படியானால் செப்டம்பர் நடுப்பகுதிதான் மத்திய காலப்பகுதியாக அமையும். எனவே, செப்டம்பர் 25 மற்றும் 30 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நடத்தப்படலாம்.

ஆனால் மக்கள் விரைவில் தேர்தலை எதிர்பார்ப்பதால் செப்டம்பர் 18 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படுவதையே மக்கள் விரும்புகின்றனர். அதற்கு மக்களும் தயார்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதியை தேர்தல்
ஆணைக்குழுவாலேயே அறிவிக்கப்படும். தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடியே திகதியை தீர்மானிப்பார்கள். இதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கே உள்ளது.” – என்றார்.

Related Articles

Latest Articles