யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றைய தினத்தோடு நிறை வுக்கு வந்தன. எதிர்வரும் 18 ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழி வழக்கானது திறந்த நீதிமன்றில் அழைக்கப்படவுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுகளுக்கான பாதீடு தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் இறுதி நாளான 45ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது. ஏற்கனவே அடையாளம் 4 மனித என்புத் தொகுதிகள் நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்டன.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 54 நாட்கள் இடம்பெற்ற அகழ் வுப் பணிகளில் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டிள் இருந்து மொத்தமாக 240 மனித என்புத் தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் 239 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் குவியல்களாக 14 மனித எச்சக் குவியல்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இவை சட்ட மருத்துவ அதிகாரி பிரண வன் செல்லையாவிடம் ஆய்வுக்காகக் கையளிக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியிள் இருந்து இதுவரை 72 சான்றுப்பொருட்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் 13 மீற்றர் நீளமும் 11 மீற்றர் அகலமும் கொண்டதாக தடயவியல் அகழ்வாய்வுத்தளம் ஒன்று காணப்பட்டது. தொடர் அகழ்வுப் பணிகளின் பின்னர் 23 மீற்றர் 40 சென்ரிமீற்றர் நீளமும் 11 மீற்றர் 20 சென்ரிமீற்றர் அகலமும் கொண்டதாக அது விஸ்தரிக்கப்பட்டது.
சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் இடம்பெற்ற ஜி.பி.ஆர். ஸ்கான் அறிக்கைகளின் பிரகாரம் மேலும் குறைந்தது எட்டு வாரங்கள் வரை செம்மணி மனி தப் புதைகுழியில் அகழ்வுகள் மேற்கொள் ளப்பட வேண்டும் என்று தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றத் துக்குச் சுட்டிக்காட்டிருந்தார்.
இந்நிலையில் எதிர்வரும் 18ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழி வழக்கா னது திறந்த நீதிமன்றத்தில் அழைக் கப்படவுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுகளுக்கான பாதீடு தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகின்றது.