செம்மணியை மீண்டும் புதைக்க இடமளியாதீர்! நீதி கோரி யாழில் போராட்டம்

 

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் நகர் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில், ‘செம்மணி மனிதப் புதைகுழியை மீண்டும் மூடி மறைப்பதை நிறுத்து! உண்மையை வெளிப்படுத்து!!’ எனும் தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ”மேலும் அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய், அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமையை உறுதி செய், செம்மணியை மீண்டும் புதைக்க இடம் கொடுக்காதே…! உண்மையை வெளிப்படுத்து!!, அனைத்து காணாமல் ஆக்கல்களுக்கும் இப்போதாவது நீதி வழங்கு” ஆகிய வசனங்கள் அடங்கிய பதைதைகளை ஏந்தியிருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் சிங்கள மக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles