திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று இடம்பெற்ற மோதலில் பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி சம்பவத்தில் 28 தொடக்கம் 58 வயதுக்கு இடைப்பட்ட நபர்களே காயமடைந்துள்ளனர்.
மிரிஸ்வெவ பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த சேனைப்பயிர்ச் செய்கைக்குள் மாடுகள் புகுந்து நாசமாக்கியுள்ளதாக சேனைப்பயிர் செய்கையாளர், மாட்டின் உரிமையாளரிடம் நஷ்ட ஈடுகோரியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில்இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் பெண்ணொருவர் உட்பட ஆறுபேர் காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், பெண் மற்றும் வயோதிபர் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மொர வெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
