ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இது தொடர்பான தீர்மானம் தேசிய சபையில் எடுக்கப்பட்ட பின்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
இதொகாவின் தேசிய சபை எதிர்வரும் 18 ஆம் திகதி கொட்டகலையில் கூடவுள்ளது.